சவுதியில் முதல் முறையாக புனிதத் தலங்களின் பாதுகாப்பு பணியில் பெண்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 22, 2021

சவுதியில் முதல் முறையாக புனிதத் தலங்களின் பாதுகாப்பு பணியில் பெண்கள்

சவுதி அரேபியாவில் இஸ்லாமியரிர்களின் புனித தலங்களான மக்கா மற்றும் மதீனாவில் உள்ள யாத்ரீகர்களை கண்காணிக்கும் பாதுகாப்பு பணியில் பெண்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் யாத்ரீகர்களை கண்காணிக்க இராணுவத்தில் பணியாற்றும் சவுதி பெண்கள் ஈடுப்பட்டுள்ளதாக டாய்ச் வெல்லே செய்தி சேவை தெரிவித்துள்ளது.

அவர்கள் இராணுவ சீருடையுடன், நீண்ட ஜாக்கெட், தளர்வான காற்சட்டை, மற்றும் தலைமுடியை மறைக்கும் ஒரு முக்காடு மீது ஒரு கறுப்பு பெரட் ஆகியவற்றைக் அணிந்துள்ளனர்.

இது குறித்து டுவிட்டரில் மக்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ஏராளமானவர்கள் இதை பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான முக்கிய படி என தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலமான மக்காவில் இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை ஆரம்பமாகியுள்ளது.

அதில் பங்கேற்க சவுதி அரேபியாவின் குடிமக்கள் மற்றும் அந்நாட்டில் வசிப்போருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 60,000 யாத்ரீகர்கள் தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுகின்றனர். 

இதனிடையே கடந்தாண்டு கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்ததால் 10,000 பேருக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment