ஆண்டுதோறும் சுமார் 400,000 பேர் பலி : மலேரியாவுக்கு தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் பயோஎன்டெக் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 29, 2021

ஆண்டுதோறும் சுமார் 400,000 பேர் பலி : மலேரியாவுக்கு தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் பயோஎன்டெக்

ஜெர்மானிய மருந்தாக்க நிறுவனமான பயோஎன்டெக், mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மலேரியாவுக்கு எதிரான முதல் தடுப்பூசியை உருவாக்கத் திட்டமிடுவதாக அறிவித்துள்ளது.

பயோஎன்டென் நிறுவனம், பைசர் நிறுவனத்துடன் இணைந்து 10 மாதங்களில் கொவிட்-19 நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியது.

அந்தத் தடுப்பு மருந்துக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, மலேரியாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கவுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டது. 

மனிதர்களிடம் அந்தத் தடுப்பு மருந்தைச் சோதிக்கும் பணி, ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என அந்த நிறுவனம் தெரிவித்தது.

ஐரோப்பிய ஆணையம், செல்வந்தர் பில் கேட்ஸ் நிர்வகிக்கும் பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் அறநிறுவனம் ஆகியவற்றுடன் மற்ற பல அமைப்புகளும் பயோஎன்டெக் நிறுவனத்தின் முயற்சிக்கு ஆதரவு வழங்க விருக்கின்றன.

அந்தத் தடுப்பு மருந்து வெற்றிகரமாக உருவாக்கப்பட்டால், மலேரியாவுக்கு எதிரான போரில் அது வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. 

மலேரியாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்க, உலக அளவில் ஆய்வாளர்கள் பலகாலமாக முயன்று வருகின்றனர்.

நுளம்புகளால் பரவக்கூடிய அந்த நோய், ஆண்டுதோறும் சுமார் 400,000 பேரை பலிவாங்குவதாக மதிப்பிடப்படுகிறது.

No comments:

Post a Comment