கோவேக்சின் தடுப்பூசிக்கு இன்னும் 4 முதல் 6 வாரங்களில் முடிவு - உலக சுகாதார ஸ்தாபனம் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 10, 2021

கோவேக்சின் தடுப்பூசிக்கு இன்னும் 4 முதல் 6 வாரங்களில் முடிவு - உலக சுகாதார ஸ்தாபனம்

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வரும் கோவேக்சின் தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அண்மையில், கோவேக்சின் தடுப்பூசி நிறுவனம் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளையும், செயல் திறன் பற்றிய தரவுகளையும் வெளியிட்டது.

இந்நிலையில், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஏற்பாடு செய்திருந்த இணைய கருத்தரங்கு ஒன்றில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பங்கேற்றார். 

அப்போது அவர் பேசியதாவது, அடுத்த 4 - 6 வாரங்களில் கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. 

பாரத் பயோடெக் நிறுவனத்தின் மொத்த தரவுகளும் உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு கிடைத்து வருகிறது. நிபுணர் குழுவால் இது ஆய்வு செய்யப்படும் என்றார்.

No comments:

Post a Comment