இலங்கையின் சனத் தொகையில் 36% ஆனோருக்கு முதல் டோஸ் நிறைவு - அடுத்த வாரம் மேலும் 20 இலட்சம் Sinopharm டோஸ்கள் வரவுள்ளன - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 14, 2021

இலங்கையின் சனத் தொகையில் 36% ஆனோருக்கு முதல் டோஸ் நிறைவு - அடுத்த வாரம் மேலும் 20 இலட்சம் Sinopharm டோஸ்கள் வரவுள்ளன

நாட்டின் சனத் தொகையில் 36 வீதமான மக்களுக்கு கொவிட் தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

அதன் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ரஞ்சித் பட்டுவந்துடாவ தெரிவித்தார்.

இன்று (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் சனத் தொகையில் 13 வீதமானோருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டு முழுமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 70 வீதமானோருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 56 வீதமானோருக்கும் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் இதன் போது தெரிவித்தார்.

இந்நிலையில், அடுத்த வாரம் இலங்கைக்கு மேலும் 2 மில்லியன் டோஸ் Sinopharm தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளதாக, இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இலங்கைக்கு கிடைக்கும் Sinopharm தடுப்பூசிகள் டோஸின் எணணிக்கை 9.1 மில்லியன் என தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலவசமாக கிடைத்தவை
மார்ச் 31 - 600,000 (0.6 மில்லியன்)
மே 25 - 500,000 (0.5 மில்லியன்)

கொள்வனவு செய்யப்பட்டவை
ஜூன் 06 - ஒரு மில்லியன்
ஜூன் 09 - ஒரு மில்லியன்
ஜூலை 02 - ஒரு மில்லியன்
ஜூலை 04 - ஒரு மில்லியன்
ஜூலை 11 - 2 மில்லியன்
அடுத்த வாரம் - 2 மில்லியன்

No comments:

Post a Comment