இலங்கையில் மேலும் 31 கொவிட் மரணங்கள் : 14 ஆண்கள், 17 பெண்கள் - News View

Breaking

Post Top Ad

Saturday, July 17, 2021

இலங்கையில் மேலும் 31 கொவிட் மரணங்கள் : 14 ஆண்கள், 17 பெண்கள்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 31 மரணங்கள் நேற்று (16) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (17) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 3,702 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 31 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 3,733 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மரணமடைந்த 31 பேரில், 17 பெண்களும் 14 ஆண்களும் அடங்குகின்றனர். அவர்களில் 23 பேர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களாவர்.

இதேவேளை, இன்று இதுவரை 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டில் இதுவரை 2,83,040 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது​.

No comments:

Post a Comment

Post Bottom Ad