பதக்கம் வெல்பவர்கள் 30 வினாடிகள் முகக்கவசத்தை கழற்ற அனுமதி - News View

Breaking

Monday, July 26, 2021

பதக்கம் வெல்பவர்கள் 30 வினாடிகள் முகக்கவசத்தை கழற்ற அனுமதி

டோக்கியோ ஒலிம்பிக்கில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடுமையான சுகாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பதக்கம் வென்றவர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாத்திரம் மேடையில் 30 விநாடிகள் வரை முகக்கவசங்களை கழற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

வெற்றி விழாவில் குழு புகைப்படம் எடுக்கும்போது முகமூடிகளை அணிய வேண்டியிருக்கும் அதே வேளையில், பதக்கம் வென்றவர்கள் உடல் ரீதியாக தொலைவில் இருக்கிறார்கள் என்ற நிபந்தனையின் பேரில் விதியின் தளர்வு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த முகக்கவச தளர்வானது விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டு வாழ்க்கையில் ஒரு தனித்துவமான தருணத்தில் அவர்களின் முகங்களையும் உணர்ச்சிகளையும் படம் பிடிக்கும் ஊடகங்களுக்கும், அதேபோல் அனைத்து பதக்கம் வென்றவர்களின் சாதனைகளையும் ஒன்றாகக் கொண்டாடவும் உதவும் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்

No comments:

Post a Comment