கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த 3 அதி சொகுசு பஸ்களை மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பஸ்ஸில் பயணித்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாகாணங்களுக்கிடையிலான பிரயாணத் தடையை மீறி கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மூன்று சொகுசு பஸ் வண்டிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பஸ் வண்டிகளில் 49 பயணிகள் இருந்ததாகவும் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமரகோன் தெரிவித்தார்.
இவர்கள் அன்டிஜன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டபோது மூன்று பேருக்கு கொவிட் தொற்று காணப்பட்டதாக ஏறாவூர்ப் பற்று பிரதேச சுகாதார வைத்தியதிகாரி இ.சிறிநாத் தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தும்பாலஞ்சோலை இராணுவ முகாம் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இந்த பஸ் வண்டிகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலிருந்து நான்கு மாகாணங்களைக் கடந்து கொழும்பிற்குச் சென்று திரும்பி வரும் வழியில் பாதுகாப்புத் தரப்பினரால் சோதனையிடப்பட்டபோது அவர்களிடம் விசேட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பாதை அனுமதியோ இருக்கவில்லையெனத் தெரியவந்துள்ளது.
இந்த பஸ் வண்டிகளின் சாரதிகள் மற்றும் நடாத்துநர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட பயணிகள் கரடியனாறு கொவிட் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த பஸ் வண்டியிலிருந்த ஏனைய பயணிகள் அன்டிஜன் பரிசோதனையினையடுத்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
நேற்றயதினம் கொழும்பில் வைத்து சில பேருந்துகளுக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன் முக்கிய தேவையுடையவர்கள் பிரயாணம் செய்வதற்காகவே பஸ் மட்டக்காப்பில் இருந்து கொழும்பு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment