உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டது மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவு - News View

About Us

About Us

Breaking

Friday, July 2, 2021

உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டது மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவு

(சர்ஜுன் லாபீர்)

மருதமுனைப் பிரதேசத்தில் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு, நேற்றுமுந்தினம் எடுக்கப்பட்ட 128 பி.சி.ஆர் மாதிரிகளில் 100 மாதிரிகளின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம் 17 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக இணங்கானப்பட்டதை தொடர்ந்து உடன் அமுலுக்கும் வரும் வகையில் இன்று (2) மருதமுனை-03 கிராம சேவகர் பிரிவு முற்று முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது.

இன்று அவசர அவசரமாக கல்முனை மநகர சபை முதல்வர் சிரோஸ்ட சட்டத்தரணி ஏ.எம். ரக்கீப் தலைமைமையில் எடுக்கப்பட்ட அவசர தீர்மானத்தின் பிரகாரம் சுகாதார துறையினரோடு இணைந்து மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த வகையில் மஸூர் மெளலானா வீதியின் தெற்கு பக்கமாக இருந்து சம்ஸம் வீதி, மக்காமடி வீதி, ஹிஜ்ரா வீதி, இஸ்லாம் நகர், பொது நூலக வீதியின் வடக்கு பக்கம் ஆகிய விதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படவுள்ளது.

முடக்கத்துக்கு உள்ளாகவுள்ள வீதிகளின் எல்லைகளை இராணுவத்தினருக்கு கல்முனை மேயர் சட்டத்தரணி ஏ.எம். ரக்கீப், கல்முனை பிரதேச செயலாளர். ஜே.லியாக்கத் அலி, கல்முனை இரானுவ மேஜர் சாந்த வீஜயகோன், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி, கல்முனை மாநகர பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்சாத் காரியப்பர், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அமீர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவகர் ஆகியோர் பங்குபற்றுதலுடன் இணங்காட்டப்பட்டது.

No comments:

Post a Comment