29 செக்கனுக்குள் முடிந்த போட்டி : தோற்றார் இலங்கை வீரர் சாமர நுவன் - News View

Breaking

Monday, July 26, 2021

29 செக்கனுக்குள் முடிந்த போட்டி : தோற்றார் இலங்கை வீரர் சாமர நுவன்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் திருவிழாவின் மூன்றாம நாளான இன்று இலங்கை போட்டியிட்ட ஜூடோவில் தோல்வியைத் தழுவிக் கொண்டது.

இன்று காலை நடைபெற்ற இந்தப் போட்டியில் இலங்கை சார்பாக போட்டியிட்ட சாமர நுவன், சிபூதிக் வீரரை எதிர்கொண்டார்.

சாமர நுவன் மீது பெரும் எதிர்பார்ப்பு கொண்டிருந்தாலும் போட்டி ஆரம்பித்து 29 செக்கனுக்குள் போட்டி முடிவுக்கு வர சாமர 10-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியைத் தழுவிக் கொண்டு வந்த வேகத்திலேயே அரங்கை விட்டு வெளியேறினார்.

இலங்கைக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்த இந்தத் தோல்வியானது ஒரு நிமிடம் கூட கடக்காததுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்

No comments:

Post a Comment