24 மணி நேரத்தில் 262 தலிபான்களை கொன்ற ஆப்கானிஸ்தான் படையினர் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 25, 2021

24 மணி நேரத்தில் 262 தலிபான்களை கொன்ற ஆப்கானிஸ்தான் படையினர்

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை (ஜூலை 24) தங்கள் பாதுகாப்புப் படையினர் பல்வேறு மாகாணங்களில் 262 தலிபான் பயங்கரவாதிகளை வெறும் 24 மணி நேரத்தில் கொன்றதாகக் கூறியுள்ளது.

ஆப்கானிய படைகளின் விசேட நடவடிக்கைகளின் போது 176 தலிபான் பயங்கரவாதிகள் காயமடைந்துள்ளதாகவும், 21 மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் செயலிழக்கம் செய்யப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் லக்மான், நங்கர்ஹார், நூரிஸ்தான், குனார், கஸ்னி, பக்தியா, காந்தஹார், ஹெராத், பால்க், ஜோவ்ஜன், ஹெல்மண்ட், குண்டுஸ் மற்றும் கபீசா ஆகிய மாகாணங்களில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரின் சிறப்பு நடவடிக்கைகளின் விளைவாக 262 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 176 பேர் காயமடைந்தனர்.

மேலும், 21 மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் செயலிழக்கம் செய்யப்பட்டதாக அமைச்சகம் ஒரு டுவிட்டர் பதிவில் உறுதிபடுத்தியுள்ளது.

அமெரிக்க படையினர் வெளியேறி வருகின்ற நிலையில் தலிபான்கள் நகரங்களை ஆக்கிரமிப்பதைத் தடுக்கும் முயற்சியில், ஆப்கானிஸ்தான் அரசாங்கம் கிட்டத்தட்ட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த உத்தரவுகளுக்கு அமைவாக தலைநகர் காபூல் மற்றும் இரண்டு மாகாணங்களைத் தவிர, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை எந்த இயக்கமும் அனுமதிக்கப்படாது.

No comments:

Post a Comment