கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 2 மாதங்களுக்குப் பின்னர் பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகை ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 11, 2021

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 2 மாதங்களுக்குப் பின்னர் பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகை ஆரம்பம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 2 மாதங்களுக்குப் பின்னர் பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிருவாகிகள் தெரிவித்தனர்.

கடந்த றமழான் நோன்பு நடுப்பகுதியில் நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல்களும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக கூட்டுத் தொழுகைகள் தடை செய்யப்பட்டிருந்தன.

அதனடிப்படையில் மூடப்பட்டிருந்த வணக்கத்தலங்கள் சனிக்கிழமை 10.07.2021 திறப்பதற்கான அனுமதி சுகாதார அமைச்சின் பணிப்பாளரினால் வழங்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து சுகாதார வழிமுறைகளைப் பேணி பள்ளிவாயல்களை தொழுகைக்காக திறப்பதற்கான அனுமதியை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வழங்கியிருந்தது.

அதன் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா முடக்கத்தின் கீழுள்ள பகுதிகளைத் தவிர மற்ற அனைத்துப் பள்ளிவாசல்களிலும் சனிக்கிழமை இரவுத் தொழுகைகள் இடம்பெற்றதாக அதன் நிருவாகிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகள் கடந்த சனிக்கிழமை 10.07.2021 தொடக்கம் தளர்த்தப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment