ஒரே நாளில் இலங்கையை வந்தடைந்த அதிகூடிய கொவிட் தடுப்பூசிகள் - News View

Breaking

Post Top Ad

Sunday, July 11, 2021

ஒரே நாளில் இலங்கையை வந்தடைந்த அதிகூடிய கொவிட் தடுப்பூசிகள்

இன்று (11) அதிகாலை Sinopharm தடுப்பூசிகளின் 20 இலட்சம் டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

அந்த வகையில் ஒரே நாளில் இலங்கையை வந்தடைந்த கொவிட்-19 தடுப்பூசி டோஸ் தொகை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL 869 எனும் விமானம் 10 இலட்சம் Sinopharm தடுப்பூசி டோஸ்களுடன் இன்று அதிகாலை 5.10 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது தொகுதியான மற்றுமொரு 10 இலட்சம் Sinopharm டோஸ் தடுப்பூசிகளுடன் இரண்டாவது ஶ்ரீ லங்கம் விமான சேவை விமானம் அதிகாலை 6.40 மணிக்கு இலங்கையை வந்தடைந்தது.

அந்த வகையில், இன்று பெறப்பட்ட தடுப்பூசிகள், தடுப்பூசி திட்டத்தின் கீழ் நாட்டில் முதல் டோஸ் பெறாதவர்களுக்கு வழங்கப்படுமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad