டெவோன் நீர் வீழ்ச்சியில் இடறி வீழ்ந்த 19 வயது யுவதி மாயம் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 18, 2021

டெவோன் நீர் வீழ்ச்சியில் இடறி வீழ்ந்த 19 வயது யுவதி மாயம்

பத்தனை, டெவோன் நீர் வீழ்ச்சியை பார்க்கச் சென்ற யுவதி ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த யுவதியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

லிந்துலை, லென்ந்தோமஸ் தோட்டத்தை சேர்ந்த 19 வயதுடைய மணி பவித்ரா என்ற யுவதியே இவ்வாறு நீரில் அடித்து சென்றுள்ளார்.

3 நண்பிகளுடன் இன்று (18) மதியம் 01 மணியளவில் டெவோன் நீர் வீழ்ச்சியை பார்வையிட சென்ற குறித்த யுவதி டெவோன் ஆற்றில் இறங்கி கால்களை கழுவ முற்பட்ட போதே நீரில் அடித்துச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

டெவோன் நீர் வீழ்ச்சி பகுதியில் கற்பாறை பகுதியில் வழுக்கல் நிலை காணப்படுவதனால் அப்பகுதியில் நுழைய வேண்டாம் என தடை கம்பி வேலி அடிக்கப்பட்டுள்ள போதிலும் அதை தாண்டியே யுவதிகள் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

297 அடி உயரமுள்ள டெவோன் நீர் வீழ்ச்சியில் இருந்து கீழே வீழ்ந்திருக்கலம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் காணாமல் போன யுவதியை மீட்கும் பணியில் இராணுவத்தினரும், திம்புள்ள பத்தனை பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.

மலையக நிருபர் இராமச்சந்திரன்

No comments:

Post a Comment