இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது துபாய் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 19, 2021

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது துபாய்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அங்கீகரித்த கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றிருந்தால், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் உள்ள தமது குடியிருப்பாளர்களுக்கான பயணயக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளதாக துபாய் தெரிவித்துள்ளது.

ஷேக் மன்சூர் பின் மொஹமட் பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையிலான துபாயில் நெருக்கடி மற்றும் பேரழிவு முகாமைத்துவத்தின் உச்ச குழு தீர்மானங்களை மேற்கொள்ளிட்டு 'Gulf News' சேவை இதனை அறிவித்துள்ளது.

அதன்படி தென்னாபிரிக்கா, இந்தியா மற்றும் நைஜீரியா நாடுகளில் சிக்கியுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியிருப்பு விசாக்களை வைத்திருப்போர் எதிர்வரும் ஜூன் 23 முதல் நாடு திரும்ப முடியும்.

சினோபார்ம், ஃபைசர்-பயோஎன்டெக், ஸ்பூட்னிக் வி மற்றும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா ஆகிய கொவிட்-19 தடுப்பூசிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment