பமுனுகம, உஸ்வெட்டகொய்யவா பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த தேரர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முதியோர் இல்லம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஒன்று என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 73 வயதுடைய ஜாஎல பகுதியை சேர்ந்த ஒருவர் தாக்கியமையினாலேயே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நேற்று (19) காலை இவ்வாறு சந்தேக நபரினால் தேரர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து வெலிசறை நீதிவான் நீதிபதி விசாரணையை நடத்தியுள்ளதுடன், உயிரிழந்த துறவியின் பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளது.
அங்கு 18 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அத்தகைய ஒரு முதியோர் இல்ல பராமரிப்பதில் பொருத்தமான அளவுகோல்கள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதையும், அதற்கான பதிவு பெறப்பட்டுள்ளதா என்பதையும் கண்டறிய விசாரணைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment