ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதை ஆளுந்தரப்பினரே ஏற்றுக் கொண்டுள்ளனர் - இம்ரான் மஹரூப் - News View

About Us

Add+Banner

Breaking

  

Wednesday, June 30, 2021

demo-image

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதை ஆளுந்தரப்பினரே ஏற்றுக் கொண்டுள்ளனர் - இம்ரான் மஹரூப்

21-60d0a4a0c8ad2
(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக ஆளுந்தரப்பினரே ஏற்றுக் கொண்டுள்ளனர். அதன் காரணமாகவே பஷில் ராஜபக்ஷ அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்க வேண்டும் என்று கூறுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் 

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், எரிபொருள் விலை அதிகரிகப்பு, உரப் பற்றாக்குறை, கொவிட் பரவல் என்பவற்றால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஏதேனும் நிவாரணத்தை அறிவிப்பார் என்று எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் அவரது உரையில் அவ்வாறு எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை. இதனால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். யானை பசியில் இருந்த மக்களுக்கு ஜனாதிபதியின் உரை சோளப்பொறியைக் கூட வழங்கவில்லை.

இவ்வாறான நிலையில் திஸ்ஸமகாராம வாவி அபிவிருத்தியில் ஈடுபட்டுள்ள நபர்கள் அணிந்திருந்த ஆடை சீன இராணுவத்தினுடையது அல்லது என்று அரசாங்கம் கூறுகிறது. நாட்டு மக்களை முட்டாள் என எண்ணிக் கொண்டு இவ்வாறான பொய்களைக் கூற வேண்டாம் என்று அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *