எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
இலங்கையில் கொரோணாவின் பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பல கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இத்தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு அரசாங்கத்தினால் ரூபா 5000 பெறுமதியான உலருணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவையாளர் பிரிவு 02 இல் வசிக்கும் மக்களுக்கு துரிதமாக உலருணவுப் பொதிகள் கிடைப்பதற்கான ஒழுங்குகளை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவருமான நஸிர் அஹமட் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
அதனை தொடர்ந்து இன்று (14) அப்பிரதேச மக்களுக்கு குறித்த உலருணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இவ்வுலருணவு பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட், ஏறாவூர் நகர் பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் ஏ.சி அப்கர்,ஏறாவூர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி HWK. ஜெயந்த்த, ஏறாவூர் நகர சபை முன்னாள் தவிசாளர் MIM. தஸ்லிம், குறித்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு பொறுப்பான கொவிட்-19 செயலணி அதிகாரிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment