எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தின் உண்மை நிலைமைகள் வெகுவிரைவில் பகிரங்கப்படுத்தப்படும் - மத்திய சுற்றாடல் அதிகார சபை - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தின் உண்மை நிலைமைகள் வெகுவிரைவில் பகிரங்கப்படுத்தப்படும் - மத்திய சுற்றாடல் அதிகார சபை

(எம்.மனோசித்ரா)

குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் நீதிமன்றத்தினால் கப்பலுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளவதற்கான உரிமை உள்ளது. எனவே வெகுவிரைவில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இது தொடர்பில் உண்மை நிலைமைகள் பகிரங்கப்படுத்தப்படும் என்று மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவ திட்ட பணிப்பாளர் அநுர சதுருசிங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது இதனைத் தெரிவித்த 

அவர் மேலும் கூறுகையில், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் கொண்டுவரப்பட்டவை தொடர்பிலும் அவை யாருக்கு கொண்டு வரப்பட்டவை என்பது தொடர்பிலும் அறிந்து கொள்ளக்கூடிய உரிமை மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு காணப்படுகிறது.

இதுவரையில் கப்பலில் காணப்பட்ட கொள்கலன்கள், அவற்றின் எடை, சில இரசாயன பதார்த்தங்கள் தொடர்பான தகவல்கள் மாத்திரமே கிடைக்கப் பெற்றுள்ளன.

குற்ற விசாரணைப் பிரிவின் ஊடாக குறித்த கப்பல் நிறுவனத்திடம் ஒவ்வொரு கொள்கலன்களின் என்ன காணப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை எமக்கு காணப்படுகிறது. இது தொடர்பில் சட்ட ரீதியாக எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் பெற்றுக் கொள்ளப்படவுள்ள வாக்குமூலம் மற்றும் கப்பல் தொடர்பான தகவல்களிலிருந்து அதனை தெரிந்து கொள்ள முடியும். எனினும் தற்போது கிடைக்கப் பெற்றுள்ள தகவல்கள் போதுமானவையல்ல.

எவ்வாறிருப்பினும் தீ விபத்து தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள கேள்விகள் சாதாரணமானவையாகும். எனினும் குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் நீதிமன்றத்தினால் கப்பலுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். வெகுவிரைவில் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இது தொடர்பில் உண்மை நிலைமைகள் பகிரங்கப்படுத்தப்படும்.

No comments:

Post a Comment