புலனாய்வுப் பிரிவினருக்கு சாராயத்தை விற்க முற்பட்டவர் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

புலனாய்வுப் பிரிவினருக்கு சாராயத்தை விற்க முற்பட்டவர் கைது

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் எனக்கூறி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு விற்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகத்தைச் சேர்ந்த சந்தேகநபர், யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் வைத்து இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். சந்தேகநபரிடமிருந்து 6 வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.

சந்தேகநபருக்கு தொடர்பு கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் தேவை எனத் தெரிவித்து ஆறுகால்மடம் பகுதிக்கு அழைத்துள்ளனர்.

அவரும் அதிகளவு விலைபேசி 6 மதுபானப் போத்தல்களுடன் வருகை தந்து அவற்றை சிவில் உடையில் இருந்த பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு விற்க முற்பட்ட போது கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த சந்தேக நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad