கல்முனை மண் பெருமிதம் கொள்கின்றது...!! - News View

Breaking

Post Top Ad

Friday, June 11, 2021

கல்முனை மண் பெருமிதம் கொள்கின்றது...!!

(சர்ஜுன் லாபீர்)

இன்று வெளியாகிய அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மேன்மை தங்கிய ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஸ அவர்களினால் கல்முனை மண்ணைச் சேர்ந்த கேப்டன். கே.எம். தமீம் அவர்கள் 01.09.2019 ஆம் ஆண்டு முதல் தேசிய கடெட் படையணியின் மேஜர் தரத்திற்கு பதவி உயர்வு பெறுகின்றார்.

கல்முனை மண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய ரீதியில் பல்வேறுபட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வேலைத்திட்டங்களில் பங்கெடுத்து கல்முனை மண்ணிற்கு பெருமை சேர்த்த இவருக்கு கிடைக்கப் பெற்ற இக் கௌரவ பதவி உயர்வானது கல்முனை மண்ணையும் மக்களையும் மேன்மை கொள்ளச் செய்கின்றது.

ஆசிரியராக, கடேட் பயிற்றுவிப்பாளராக, சமூக சேவகராக, சிறந்த குடும்பத் தலைவராக பல்வேறு பரிணாமம் கொண்ட இவர் தற்போதய நிலையில் தேசிய இளைஞர் படையணியின் பொறுப்பாளராக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad