திருகோணமலையில் ஆறு மாதக் குழந்தை வெட்டிக் கொலை : மாமா, மாமி வைத்தியசாலையில் : சந்தேகநபரை தேடி வரும் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 19, 2021

திருகோணமலையில் ஆறு மாதக் குழந்தை வெட்டிக் கொலை : மாமா, மாமி வைத்தியசாலையில் : சந்தேகநபரை தேடி வரும் பொலிஸார்

திருகோணமலை கப்பல்துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாத குழந்தை நேற்றிரவு (19) உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மாமா, மாமி மற்றும் வாளால் வெட்டியவரின் 6 மாத குழந்தை ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று (19) பிற்பகல் 2.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் வெட்டிய சந்தேக நபரின் மாமா, மாமி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இருந்த நிலையில் மாமியாரின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் சீனக்குடா பொலிஸார் துண்டிக்கப்பட்ட கையை திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

எனினும், 43 வயதுடைய குறித்த பெண்ணுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் துண்டிக்கப்பட்ட கையை பொருத்த முடியாமல் போயுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை குறித்த சம்பவத்தில் 6 மாத குழந்தை வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. குறித்த ஆறு மாத குழந்தையின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை தேடி வருவதாகவும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை நிருபர் பாருக்

No comments:

Post a Comment