திறைசேரிக்கு திரும்பும் ஆறு மில்லியன் ரூபா நிதி - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 23, 2021

திறைசேரிக்கு திரும்பும் ஆறு மில்லியன் ரூபா நிதி

முல்லைத்தீவு பொது வைத்தியசாலையின் சாரதிகளுக்கான விடுதி அமைப்பதற்கான ஆறு மில்லியன் ரூபா நிதி விடுதி அமைக்கப்படாது திரும்புவதாக கரைதுறைபற்று பிரதேச சபையின் தவிசாளர் க.விஜிந்தன் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, மாவட்ட பொது வைத்தியசாலையில் சாரதிகளுக்கான விடுதி இல்லை. மாவட்ட பொது வைத்தியசாலையின் நிர்வாகத்தினால் சுகாதார அமைச்சிடம் பல்வேறு தடவைகள் விடுதிகள் அமைப்பதற்கான கோரிக்கைகள் அனுப்பப்பட்டன. 

மாகாண சுகாதார அமைச்சில் பல வழிகளில் நிதிகளை ஒதுக்கி இருந்தாலும் கூட விடுதிகள் அமைப்பதற்கான அனுமதிகள் மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்திற்கு கிடைக்கப் பெறவில்லை.

கட்டம் கட்டமாக ஒதுக்கப்பட்டிருந்த சுமார் ஆறு மில்லியன் ரூபா நிதி தற்போது திறைசேரிக்கு திரும்புகின்றது என்ற தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. 

மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நிதி இருக்கும் போது வேலைத்திட்டங்களை அனுமதிக்காமல் மாகாண சுகாதார அமைச்சு இழுத்தடிப்புகளை மேற்கொண்டதன் காரணமாக சாரதிகளுக்கான விடுதி தற்போது அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தவிசாளர் தெரிவித்தார். 

இதேவேளை மாகாண சுகாதார அமைச்சு ஒரு மாவட்ட வைத்தியசாலையின் சாரதிகளுக்கான விடுதி கட்டடங்களை அமைப்பதற்கு உரிய காலங்களில் அனுமதிகளை வழங்கி நிதியினை ஒதுக்காமையினால்தான் தற்போது சாரதிகளுக்கான விடுதி அமைக்காமல் நிதி திரும்புகின்றது. இதற்கான முழு பொறுப்பினையும் மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

முல்லைத்தீவு குறூப் நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad