‘சினோவக்’ தடுப்பூசியை இலங்கையில் கூட்டாக தயாரிக்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 2, 2021

‘சினோவக்’ தடுப்பூசியை இலங்கையில் கூட்டாக தயாரிக்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்

அரச மருந்துகள் உற்பத்தி கூட்டுத்தாபனம் இலங்கையில் சினோவக் கொவிட்-19 தடுப்பூசிகளைத் தயாரிப்பதற்கு உலக சுகாதார நிறுவனம் (WHO) நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

சினோவக் தடுப்பூசியானது - “சர்வதேசத் தரம், பாதுகாப்பு மற்றும் செற்திறன்” எனபவற்றைக் கொண்டிருப்பதனை உலக சுகாதார நிறுவனம் (WHO) உறுதிப்படுத்தியுள்ளதுடன், அது சர்வதேச பாவனைக்கு உகந்தது எனவும் அங்கீகரித்துள்ளது.

பீஜிங் நகரை மையமாக கொண்டு இயங்கும் சினோவக் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த தடுப்பூசி - சீன அரசாங்கத்திற்கும் எமது அரசாங்கத்திற்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சி தயாரிப்பாக இலங்கையில் உருவாக்கப்படவிருக்கின்றது.

கொவிட் நோய்த்தொற்றுக்கு எதிரான எமது நாட்டின் போராட்டத்தில் இது ஒரு பாரிய முன்னேற்றமாகும்.

No comments:

Post a Comment