மின்சார முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் : இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அறிமுகம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

மின்சார முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் : இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அறிமுகம்

மின்சார பாவனையாளர்கள், மின்சாரம் தொடர்பான முறைபாடுகளை அறிவிக்க, 077 5687387 எனும் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மின் பாவனையாளர்களுக்கு எழும் பிரச்சினைகள் குறித்து விசாரித்து தீர்வு காணும் வகையில் மின்சாரத் துறை தொடர்பான ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நிலவும் கொவிட் பரவல் நிலைக்கு மத்தியில், மின்சார பாவனையாளர்கள் தங்களது முறைபாடுகளை தெரிவிக்க 077 5687387 எனும் அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினை தொடர்புகொள்ளலாம் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த இலக்கத்தினூடாக வாட்ஸ்அப், வைபர், இமோ மூலமாகவும் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாவனையாளர்கள் தமது எழுத்து மூலமான முறைப்பாடுகளை, புகைப்படமொன்றை எடுத்து குறித்த சமூக ஊட தொடர்பாடல் சேவையின் ஊடாக அனுப்பி வைப்பதன் மூலம் அல்லது MMS தகவலாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

குறுகிய காலத்தில் சிறப்பான சேவையை பெற்றுக்கொடுக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவையைப் பெற்றுக் கொள்பவர்கள், தங்களத, பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி (இருப்பின்), மின்சாரப்பட்டியல் கணக்கு இலக்கம், முறைப்பாட்டின் விபரம், தொடர்புடைய ஆவணங்கள் (இருப்பின்) ஆகியவற்றை குறிப்பிடுமாறு பாவனையாளர்கள் தயவுசெய்து அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பான குறிப்பு இலக்கமொன்று பாவனையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விசாரணைகள் தொடர்பில் கேட்டறியவும், மேலதிக விபரங்களை தாக்கல் செய்யும் போதும், ஏதேனும் சிக்கல் ஏற்படும் நிலையில், பாவனையாளர்கள் மேற்படி இலக்கத்தினை வழங்கி உரிய அதிகாரியை தொடர்புகொள்ளலாம்.

அதற்கமைய அதிகாரிகளை நேரில் சந்திப்பதை தவிர்த்து ஒன்லைன் மற்றும் சமூக செய்தித் தொடர்பாடல் சேவைகள் ஊடாக அதிகாரிகளை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களும், ஏனைய பங்குதாரர்களையும் கேட்டுக்கொள்வதாக, ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இச்சேவைக்கு மேலதிகமாக, பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்கள் 0112392607 அல்லது 0112392608 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் info@pucsl.gov.lk அல்லது customers@pucsl.gov.lk எனும் மின்னஞ்சல் ஊடாக அல்லது www.facebook.com/pucsl ஊடாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment