கொவிட் தொற்றுக்குள்ளானோரில் பலர் வீடுகளிலேயே உயிரிழக்கக் காரணம் என்ன ? விபரிக்கின்றார் இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்க தலைவர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

கொவிட் தொற்றுக்குள்ளானோரில் பலர் வீடுகளிலேயே உயிரிழக்கக் காரணம் என்ன ? விபரிக்கின்றார் இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்க தலைவர்

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றுக்குள்ளானோரில் பெருமளவானோர் வீடுகளிலேயே உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளமைக்கான காரணம், அறிகுறிகள் குறைவடைந்த பின்னர் வைத்தியசாலைகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே தங்கியிருப்பதாகும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளமைக்கான காரணம், தொற்று அறிகுறிகள் குறைவடைந்த பின்னர் சுகாதார தரப்பினருக்கு அறிவிக்காமல் வீடுகளிலேயே இருப்பதாகும்.

இதே போன்று தொற்று அறிகுறிகள் தீவிரமடைந்தால் அதன் போது தொற்றாளரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் இன்மையும் வீடுகளில் உயிரிழப்புக்கள் பதிவாகும் வீதம் அதிகரிக்க காரணமாகும்.

கொவிட் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு அவர்களிடம் சொந்த வாகனம் இல்லாத பட்சத்தில் வேறு வாகனங்களில் செல்வதிலும் சிக்கல் காணப்படுகிறது. 

அத்தோடு 1990 அம்புலன்ஸ் சேவைகளும் தொடர் சேவையில் ஈடுபட்டுள்ளமையில் இதில் தாக்கம் செலுத்துகின்றது. எனவே சாதாரண தொற்று அறிகுறிகள் தென்படும் போதே மக்கள் வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment