எதிர்க்கட்சி தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம் : ரணிலுக்கும், அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது - ரோஹித அபேகுணவர்தன - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

எதிர்க்கட்சி தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம் : ரணிலுக்கும், அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது - ரோஹித அபேகுணவர்தன

(இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற வருகை ஐக்கிய மக்கள் சக்திக்கு பெரும் சவாலாக அமையும். எதிர்க்கட்சி தலைவர் பதவியில் வெகுவிரைவில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம். பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற வருகை குறித்து ஊடகங்கக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கத்தை நாட்டு மக்கள் முழுமையாக ஜனநாயக ரீதியில் புறக்கணித்துள்ளார்கள். ஐக்கிய தேசிய கட்சி மக்களாணைக்கு புறம்பாக செயற்பட்டதை இடம் பெற்று முடிந்த பொதுத் தேர்தலின் பெறுபேற்றின் ஊடாக அறிந்து கொள்ள முடிந்தது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு நாடு தழுவிய ரீதியில் கிடைக்கப் பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் ஒரு தேசியபட்டியல் ஆசனம் கிடைக்கப் பெற்றது.

பொதுத் தேர்தல் இடம்பெற்று 10 மாதங்களுக்கு பிறகு அந்த ஒரு தேசியபட்டடியல் ஆசனத்தின் ஊடாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றிற்கு வருகை தந்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற வருகை ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு சவாலாக அமையும். வெகுவிரைவில் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க சிறந்த அரசியல்வாதி அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளையும் எதிர்க்கும் கொள்கையை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சியினர் கொண்டுள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.

வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் வெற்றி கொள்ள முடியும். அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடுகள் காணப்படுகிறது.

பல்வேறு கொள்கையினை கொண்ட கட்சிகள் ஒன்றினைந்து அரசாங்கத்தை அமைக்கும் போது கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெறுவது இயல்பு. இக்கருத்து முரண்பாடு அரசாங்கத்தை ஒருபோதும் பலவீனப்படுத்தாது என்றார்.

No comments:

Post a Comment