மஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது : வெறுமனே ஆளும் தரப்பு அவரைப் பயன்படுத்தி குழப்பங்களை தோற்றுவிக்க மட்டுமே வழிவகுக்கும் - கலாநிதி தயான் ஜயதிலக்க - News View

About Us

About Us

Breaking

Saturday, June 12, 2021

மஹிந்தவைப் போல் ரணிலால் மீள் எழுச்சி அடைய முடியாது : வெறுமனே ஆளும் தரப்பு அவரைப் பயன்படுத்தி குழப்பங்களை தோற்றுவிக்க மட்டுமே வழிவகுக்கும் - கலாநிதி தயான் ஜயதிலக்க

(ஆர்.ராம்)

ஜனாதிபதி தேர்தலில் தோல்வி கண்டதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் பிரபல்யமான எழுச்சியைக் கண்டது போன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் மீள் எழுச்சி அடைய முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வெளியுறவுகளுக்கான சிரேஷ்ட ஆலோசகரும், இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளர்.

எதிர்வரும் 22ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியலுக்கான உறுப்பினராக அதன் தலைவர் ரணில் விக்கிரமங்க பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் அவரது வருகையால் தற்போது பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியிடையே குழப்பமான நிலைமைகள் தோன்றியிருப்பதாக தகவல்கள் வெளிவந்தவண்முள்ளன. இந்நிலையில் கருத்து வெளியிடுகையேலே தயான் ஜயதிலக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும், தெரிவிக்கையில், கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை இலங்கையின் ஒட்டு மொத்த மக்களும் நிராகரித்திருந்தனர். அதுமட்டுமன்றி, ஐ.தே.க. வின் கோட்டையென்று கூறப்படும் கொழும்பில் அம்பாந்தோட்டையில் இருந்து வருகை தந்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவை மக்கள் வெற்றி பெறச் செய்தனர். இந்தச் செயற்படானது ஐ.தே. கவையும், கொழும்பில் போட்டியிட்ட அதன் தலைவரான ரணில் விக்கிரமசிங்கவையும் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதே பொருளாகும்.

அவ்வாறு மக்களால் நிராகரிக்கப்பட்டு, மக்கள் மத்தியிலான பிரபல்யத்தைக் கொண்டிருக்காத ஒருவர் பாராளுமன்றத்திற்கு மீண்டும் வருகை தருவதால் சாதிக்கப்போவது எதுவுமில்லை. இவ்வாறானவரால் ஜனாதிபதி தேர்தல் தோல்வியின் பின்னர் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலில் பிரபல்யமான அடைந்த எழுச்சியைப் போன்று எழுந்து நிற்க முடியாது. அதற்கான எந்தவொரு சந்தர்ப்பங்களும் கிடைக்கப்போவதல்லை.

இந்நிலையில் ரணிலின் பாராளுமன்ற வருகையானது எந்தவொரு வகையிலும் தாக்கம் நிறைந்ததாக இருக்கப் போவதில்லை. வெறுமனே சபை அமர்வுகளில் ஆளும் தரப்பு அவரைப் பயன்படுத்தி குழப்பங்களை தோற்றுவிப்பதற்கு மட்டுமே வழிவகுக்கப் போகின்றது.

மேலும், இவரது வருகையால் எதிர்க்கட்சியினுள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அவ்வாறு குழப்பமடைய வேண்டிய எந்த அவசியமும் எதிர்க்கட்சிக்கு இல்லை.

மேலும், ரணிலின் நிலைமையானது இவற்று முற்றிலும் எதிரானதாக உள்ளது. அவரால் தனி நபராக எதனையும் சாதிக்க முடியாது. மக்கள் நிராகரித்த பின்னரும் அவர் மீண்டும் பாரர்ளுமன்றம் வருகின்றமையானது வெட்கப்பட வேண்டியதொன்றாகும் என்றார்.

No comments:

Post a Comment