கொரோனா வைரஸ் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம், முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் - பிரிட்டிஷ் உளவுத்துறை - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 1, 2021

கொரோனா வைரஸ் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம், முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் - பிரிட்டிஷ் உளவுத்துறை

சீனாவின் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு வாய்ப்புள்ளது என இப்போது நம்புவதாக பிரிட்டிஷ் உளவுத்துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சீனாவின் வுகான் நகரில் 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரசால் உலக அளவில் ஏற்பட்ட தாக்கம் இன்றளவும் நீடிக்கிறது.

சீனாவின் உகான் ஆய்வு மையத்தில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு நீடிக்கும் சூழலில் உலகெங்கும் அது தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பிரிட்டன் பேராசிரியர் மற்றும் நோர்வே விஞ்ஞானி ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வின் முடிவுகளை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதல்ல என கூறியுள்ள விஞ்ஞானிகள், வுகான் ஆய்வு மையத்திலேயே அது உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆய்வு மையத்தில் இருந்து வைரஸ் வெளியானதை மறைக்க, வவ்வாலில் இருந்து அது உருவானதாக கூறி சீனா தப்பிக்க முயற்சிப்பதாக விஞ்ஞானிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கு வாய்ப்புள்ளது என இப்போது நம்புவதாக பிரிட்டிஷ் உளவுத்துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தி சண்டே டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ள நிலையில், கொரானா வைரஸ் வுகான் ஆய்வகத்தில்தான் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து, முழுமையாக உலக சுகாதார நிறுவனம் விசாரணை நடத்த வேண்டும் என பிரிட்டிஷ் அரசின் தடுப்பூசித்துறை அமைச்சர் நதீம் சகாவி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரசின் மூலாதாரம் குறித்து முதலில் இதுபோன்ற செய்திகள் வெளியானாலும் அதற்கு வாய்ப்பில்லை என பரவலாக கூறப்பட்டது.

ஆனால் இப்போது அது குறித்து பல தரப்பில் இருந்தும் செய்திகள் வெளியாகும் நிலையில், ஆய்வகத்துடன் நெருங்கிய தொடர்புடைய சில நபர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இந்த சந்தேகம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. 

No comments:

Post a Comment