சீனாவில் யானை கூட்டத்தால் ஒரு மில்லியன் டொலர் இழப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, June 4, 2021

சீனாவில் யானை கூட்டத்தால் ஒரு மில்லியன் டொலர் இழப்பு

சீனாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள கிராமங்களினுள் புகுந்த யானைக் கூட்டத்தால் ஒரு மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

15 யானைகளைக் கொண்ட அந்தக் கூட்டம், கடந்த ஒரு வாரமாக விவசாய நிலங்களிலுள்ள சோளத்தைத் தின்ற வண்ணம் இருந்தன. பண்ணைகளினுள் நுழைந்து, நீர்த் தொட்டி ஒன்றிலிருந்த தண்ணீரை முழுதாகக் குடித்து முடித்தன.

யுனான் மாநிலத்திலுள்ள ஸீஷுவாங் பன்னா தேசிய இயற்கைப் பாதுகாப்புப் பகுதியில் இருந்த அந்த ஆசிய வகை யானைகள் ஏன் அங்கிருந்து வெளியேறின என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவை எங்கு செல்கின்றன என்பதும் தெரியவில்லை. 

இருப்பினும், ஏப்ரல் மாதத்திலிருந்து அந்த யானைகள் சுமார் 500 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்திருப்பதாக அவற்றைக் கண்காணித்து வரும் குடியிருப்பாளர்களும் அதிகாரிகளும் தெரிவித்தனர்.

கூட்டத்தின் தலைமை யானை மற்ற யானைகளைத் திசைமாற்றி இட்டுச் சென்றுகொண்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். 

ஏப்ரல் மாத நடுப்பகுதியிலிருந்து அந்த யானைகள் 56 ஹெக்டர் விவசாய நிலத்தைச் சேதப்படுத்தியுள்ளன. அதனால் சுமார் 1.07 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சீன ஊடகம் தகவல் அளித்தது.

No comments:

Post a Comment