பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஊடக நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஊடக நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

(நா.தனுஜா)

பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து தற்போது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஊடக நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கையிலுள்ள வெளிநாட்டு செய்தியாளர்கள் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களுடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் இலங்கையிலுள்ள வெளிநாட்டு செய்தியாளர்கள் ஒன்றியம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

தொழில் புரியும் இடங்களில் பாலியல் தொல்லைகளுக்குள்ளான ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அவ்வறிக்கையில் வெளிநாட்டு செய்தியாளர்கள் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

பாலியல் தொல்லைகள் தொடர்பில் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கும் இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கும் அவசியமான நடவடிக்கைகளை ஊடக நிறுவனங்கள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

எம்முடன் பணி புரியும் சக ஊழியர்கள் பாதுகாப்பாகவும் சமத்துவமாகவும் உணரக்கூடிய வகையில் தொழில் புரியும் இடங்களை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு நம்மனைவருக்கும் உள்ளது என்றும் அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment