தேயிலை தோட்டங்களிலும் சீனர்களை பணிக்கு அமர்த்தவா அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டுகிறது - வடிவேல் சுரேஷ் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 23, 2021

தேயிலை தோட்டங்களிலும் சீனர்களை பணிக்கு அமர்த்தவா அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டுகிறது - வடிவேல் சுரேஷ்

(எம்.மனோசித்ரா)

கொவிட் தொற்றினால் பெருந்தோட்ட மக்கள் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அப்பகுதிகளில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மற்றும் 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் என்பன முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை. தேயிலை தோட்டங்களிலும் சீனர்களை பணிக்கு அமர்த்துவதற்காகவா அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உரப் பிரச்சினையால் விவசாயிகள் பலரும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் எவ்வித திட்டமிடலும் இன்றி முன்னெடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தினால் விவசாயிகள் வீதிக்கு இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இணையவழி கல்வியூடாக கற்பதற்கான தொழில்நுட்ப அறிவு மாணவர்களுக்கு காணப்பட்டாலும், அதற்கான போதிய வசதியின்மையால் சகல பகுதிகளிலுள்ள மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள மக்களுக்கு முறையான தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. 5,000 ரூபா நிவாரண கொடுப்பனவு கட்சி சார்பாகவே வழங்கப்படுகிறது. 

பெருந்தோட்ட மக்களுக்கு கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான முறையான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை.

இதற்கு முன்னர் பசறை பகுதியில் கொவிட் தொற்று காணப்படவில்லை. ஆனால் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியவர்களை தனிமைப்படுத்தலுக்காக பசறை பகுதிக்கு அழைத்து வந்ததன் பின்னர் அங்கு தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று முச்சக்கர வண்டி சாரதிகளும் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

எனவே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஆட்சியை ஒப்படைத்து செல்லுமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொள்கிள்றோம். தேயிலை தோட்டங்களிலும் சீனர்களை பணிக்கு அமர்த்துவதற்காகவா அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment