சமூக வலைத்தள மோசடிக்காரர்கள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 9, 2021

சமூக வலைத்தள மோசடிக்காரர்கள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

(எம்.மனோசித்ரா)

சமூக வலைத்தள மோசடிக்காரர்கள் பொதுமக்களுக்கு தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்டு, நீங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்து பண மோசடியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான மோசடிக்காரர்கள் பொலிஸார், பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மற்றும் குற்ற விசாரணைப் பிரிவினர் எனத் தெரிவித்தே அழைப்பினை மேற்கொள்கின்றனர். எனவே மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதன்போது தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்படும் நபருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புள்ளது என்றும், அதற்கான சாட்சிகள் தம்மிடம் இருப்பதாகவும் மோசடிகக்காரர்களால் தெரிவிக்கப்படும்.

இது தொடர்பில் வீடுகளில் வந்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக போக்குவரத்து செலவிற்காக 20 00 - 30000 ரூபாய் பணம் வைப்பிடலிடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படும்.

அவர்கள் கூறுவதைப் போன்று போக்குவரத்திற்கான பணத்தை வைப்பிலிடாவிட்டால், பொலிஸ் நிலையம், பயங்கரவாத விசாரணைப் பிரிவு அல்லது குற்ற விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்று மோசடிக்காரர்களால் எச்சரிக்கை விடுக்கப்படும்.

இவ்வாறான செயற்பாடுகள் மோசடிக்காரர்களாலும் சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளாலும் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக பண மோசடிகள் பல இடம்பெறுகின்றமை தொடர்பில் தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

சமூக வலைத்தளங்களுக்கு, மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது தொலைபேசிக்கு அதிஷ்ட சீட்டு மூலம் பணம் அல்லது பரிசு கிடைத்துள்ளதாகவும், வெளிநாடுகளிலிலுள்ள உறவினர்கள் அன்பளிப்புக்களை அனுப்பியுள்ளதாகவும் போலியான குறுந்தகவல்கள் வரக்கூடும். இவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் இதன்போது கூறப்படும். 

இவை அனைத்தும் சமூக வலைத்தள மோசடிக்கார்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளாகும். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறான மோசடிக்காரர்களின் அறிவிப்புக்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும், பணத்தை வைப்பிலிடவோ அவர்களுக்கு வழங்கவோ வேண்டாம் என்றும் பொதுமக்களை அறிவுறுத்துகின்றோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment