ஓய்வூதிய கொடுப்பனவை சனிக்கிழமை வரை பெற்றுக் கொள்ள முடியும் : ஜனாதிபதி செயலணி பணிப்புரை - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

ஓய்வூதிய கொடுப்பனவை சனிக்கிழமை வரை பெற்றுக் கொள்ள முடியும் : ஜனாதிபதி செயலணி பணிப்புரை

ஓய்வூதிய சம்பளம் வழங்கும் செயற்பாடுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும், நாளையும் என மூன்று தினங்களுக்கு தபால் நிலையங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மூலமாகவும் ஓய்வூதியக்காரர்கள் அதனை பெற்றுக் கொள்ள முடியும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதற்கிணங்க தபால் நிலையங்கள் நாளை 12ஆம் திகதி சனிக்கிழமையும் திறக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஓய்வூதியம் பெறுவதற்காக தபால் நிலையங்களுக்கு செல்வோருக்கு எத்தகைய அனுமதிப்பத்திரமும் தேவையில்லை என்றும் அவ்வாறு தபால் நிலையங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கு இலவசமாக போக்குவரத்து வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஓய்வூதிய சம்பளத்தைப் பெற்றுக் கொள்பவர்கள் அதற்காக ஓய்வூதிய அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கையடக்க தொலைபேசிக்கு அனுப்பப்பட்டுள்ள குறுந்தகவல் ஆகியவற்றை பயணத் தடைக்கான அனுமதியாக உபயோகிக்க முடியும் என பொருளாதார மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.

ஓய்வூதியர் சம்பளம் மற்றும் பொருள் உதவிப்பணம் ஆகியவற்றில் பெற்றுக்கொள்வதற்காக செல்வோருக்கு இன்றும் நாளையும் விசேட பஸ் சேவைகளை இலவசமாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

அதற்காக 2750 பஸ் சேவைகளை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பிரதேச செயலாளர்கள் மற்றும் இராணுவத்தினர் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad