பாலியல் குற்றங்களைத் தடுக்க தேவாலய சட்டங்களில் திருத்தம் மேற்கொண்டுள்ளார் போப் - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 2, 2021

பாலியல் குற்றங்களைத் தடுக்க தேவாலய சட்டங்களில் திருத்தம் மேற்கொண்டுள்ளார் போப்

கத்தோலிக்க நிறுவனங்களில் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையிலான சட்டத் திருத்தங்களை போப் பிரான்சிஸ் மேற்கொண்டுள்ளார்.

தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, வயது வந்த நபா்களிடமும் பாதிரியார்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதைக் குற்றமாக்கும் வகையில் தேவாலயச் சட்டங்களில் போப் பிரான்சிஸ் மாற்றங்கள் செய்துள்ளார்.

முறைப்படி நியமிக்கப்படாமல் தேவாலயப் பதவிகளை வகிப்பவா்களுக்கும் இதுபோன்ற பாலியல் குற்றங்களுக்காக தண்டனை விதிப்பதற்கு புதிய சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 130 கோடி கத்தோலிக்க தேவாலயங்கள் பின்பற்றும் சட்டத்தில் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

14 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த திருத்தங்கள் குறித்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை (01) வெளியிடப்பட்டது.

முன்னாள் பாதிரியார் தியோடா் மெக்கேரிக் உள்ளிட்டோருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளால் சா்ச்சை எழுந்தது. இந்த சூழலில் தேவாலயச் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad