கிழக்கு மாகாணத்துக்கு தேவையான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன : அமைச்சர் நாமல் - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 9, 2021

கிழக்கு மாகாணத்துக்கு தேவையான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன : அமைச்சர் நாமல்

(ஆர்.யசி, எம்,ஆர்.எம்.வசீம்)

கொவிட் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் பொது சுகாதார வலயங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகள் தீர்மானிக்கப்படுவது சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் புள்ளி விபரங்களின் அடிப்படையிலாகும். அதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்துக்கு தேவையான தடுப்பூசிகள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் தமிழ் தேசிய கட்டமைப்பு உறுப்பினர் ராசமாணிக்கம் சானக்கியன் உரையாற்றுகையில், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு கொவிட் தடுப்பூசி கிடைக்கப் பெற்றிருக்கின்றன. ஆனால் கல்முனை பிரதேசத்துக்கு ஒரு தடுப்பூசியும் கிடைக்கவில்லை. அது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ் தொடர்ந்து குறிப்பிடுகையில், கொவிட் தடுப்பூசி விநியோகிக்கப்படும் பொது சுகாதார வலயங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவுகள் தீர்மானிக்கப்படுவது சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் புள்ளி விபரங்களின் அடிப்படையிலாகும். அதன் பிரகாரம் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு தடுப்பூசி விநியோகிகப்படுகின்றன. 

அதன் பிரகாரம் மேல் மாகாணத்தில் கொவிட் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்குதல் கிழக்கு மாகாணத்தில் கொவிட் முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

அத்துடன் அடுத்த வாரத்தில், மேலும் 10 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டுக்கு வர இருப்பதாக எமக்கு தெரிவித்திருக்கின்றன. அவை கிடைத்தவுடன் தேவையான மாவட்டங்களுக்கு, சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் புள்ளி விபரங்களின் அடிப்படையில் விநியோகிக்க நடவடிக்கை எடுப்போம்.

அதேபோன்று சுகாதார துறையினரின் ஆலோசனைக்கமைய, முதலீட்டு வர்த்தக வலயங்கள், புடவை தொழிற்சாலை ஊழியர்களுக்கு விசேட வேலைத்திட்டத்தின் கீழ் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad