இலங்கையில் சிங்கத்திற்கும் கொரோனா ! இதுவே முதல் முறை - News View

About Us

About Us

Breaking

Friday, June 18, 2021

இலங்கையில் சிங்கத்திற்கும் கொரோனா ! இதுவே முதல் முறை

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் வசித்து வரும் சிங்கம் ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிங்கம் 3 நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தமையினால், மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்கமைய, இருமல் மற்றும் தொண்டை நோவினால் சிங்கம் அவதிப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

அதன் பின்னர் சளி மாதிரி பெறப்பட்டு பேராதனை கால்நடை மருந்துவ பீடத்துக்கு அனுப்பப்பட்டு, அது தொடர்பான மேலதிக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையைில், குறித்த சிங்கத்துக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 8 வருடங்களாக வசித்துவரும் 'தோர்' என்ற இந்த சிங்கம், கடந்த 2012 ஆம் ஆண்டு தென் கொரியாவிலிருந்து தேசிய மிருகக்காட்சி சாலைக்குக் கொண்டுவரப்பட்டது.

இந்த சிங்கத்துக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து, சிங்கத்துக்கு பொறுப்பாக இருந்த மூவரைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தோர் வசித்து வரும் பகுதியில், இவ்வாண்டு கொண்டுவரப்பட்ட ஷீனா என்ற சிங்கமும், மேலும் 4 சிங்கங்களும் வசித்து வருகின்றன.

அவற்றுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக தெஹிவளை மிருகக்காட்சிசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்ற சம்பவங்கள் ஏனைய நாடுகளிலிருந்தும் பதிவாகியிருந்தாலும், இலங்கையில் விலங்கு ஒன்று கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இதுவே முதல் முறையாகும்.

No comments:

Post a Comment