கொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடையாக வழங்கியது - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

கொழும்பு துறைமுக நகரம் உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடையாக வழங்கியது

மூன்றாவது அலை காரணமாக நாடு முழுவதும் கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலைமைக்கு மத்தியில், கொழும்பு துறைமுக நகரம் தொற்றுநோய்க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கு உதவும் முகமாக உயர் பாய்ச்சல் திறன் கொண்ட ஒட்சிசன் சிகிச்சை இயந்திரங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த நன்கொடை சுகாதார அமைச்சரான பவித்ரா வன்னியாராச்சி அவர்களிடம் செவ்வாய்க்கிழமை (08) அன்று சுகாதார அமைச்சின் வளாகத்தில் வைத்து வழங்கப்பட்டதுடன், CHEC Port City Colombo நிறுவனத்தின் சார்பாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளரான ஜியாங் கௌலியாங் அவர்கள் இதனை கையளித்து வைத்துள்ளார்.

நாடெங்கிலும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதுபோன்ற உபகரணங்களுக்கான அதிக தேவை காணப்படுவதன் காரணமாக இது ஒரு தக்க தருணத்தில் எடுக்கப்பட்ட முயற்சி என்று அமைச்சர் அவர்கள் இந்த நன்கொடை முயற்சியை மிகவும் பாராட்டினார். 

கொழும்பு துறைமுக நகரமானது நாட்டில் தொற்றுநோய் பரவ ஆரம்பித்ததிலிருந்து கொவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் சுகாதார அதிகாரிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதுடன், கடந்த சில மாதங்களாக சுகாதார அதிகாரிகளுக்கு காலத்திற்கு தேவையான பல நன்கொடைகளை வழங்கியுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளரான வைத்தியர் எஸ். எச். முனசிங்க மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் அசேல குணவர்தன மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளரான குய் யாங், வெகுச தொடர்பாடல்களுக்கான தலைமை அதிகாரியான காசப்ப செனாரத் மற்றும் நிதி ஆய்வு முகாமையாளரான நபிஹா மொஹமட் ஆகியோரும் இந்த நன்கொடையைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad