வடக்கு மாகாணத்தில் ஒரு வயது குழந்தை அடங்கலாக 144 பேருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

வடக்கு மாகாணத்தில் ஒரு வயது குழந்தை அடங்கலாக 144 பேருக்கு கொரோனா

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வயதுக்கு ழந்தை உள்ளடங்கலான 116 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 144 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண ஆய்வுகூடங்களில் நேற்று பகல் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் 627 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை யில் 104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவற்றின் விவரம் வருமாறு
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 37 பேர் (08 வயதுச் சிறுமிகள், 05, 11, 15 வயதுடைய சிறுவர்கள் என நால்வரும் உள்ளடக்கம்) யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேர் (08 வயதுடைய சிறுவனும் உள்ளடக்கம்) கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர், யாழ். போதனா வைத்தியசாலையில் 07 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர் (03 வயதும் 08 மாதமுமான பெண் குழந்தை ஒன்றும் உள்ளடக்கம்), வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 20 பேர் (02, 10, 14, 15 வயதுகளையுடைய சிறுமிகள், 06, 10 வயதுகளையுடைய சிறுவர்கள் என அறுவர் உள்ளடக்கம்), வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், மல்லாவி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர் (15 வயதுடைய சிறுவன் ஒருவர் உள்ளடக்கம்), முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 320 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 40 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களின் விவரம் வருமாறு
யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேர் (08, 12 வயதுகளை உடைய சிறுவர்கள் இருவரும் உள்ளடக்கம்), பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேர் ( ஒரு வயதுடைய பெண் குழந்தை ஒன்று), சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேர் (03, 06 வயதுகளை உடைய சிறுமிகள் இருவர் உட்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் உள்ளடக்கம்), யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேர், யாழ். போதனா வைத்தியசாலையில் ஒருவர் என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad