காத்தான்குடியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதில் பெரும் ஆர்வம் - News View

Breaking

Post Top Ad

Thursday, June 10, 2021

காத்தான்குடியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போடுவதில் பெரும் ஆர்வம்

எம்.எஸ்.எம்.நூருதீன்

காத்தான்குடியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியை போடுவதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காத்தான்குடியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நேற்று (10) வியாழக்கிழக்கிழமை இடம் பெற்றது.

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலைக் கட்டிடத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம் பெற்றது.

காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.நபீல், காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் ஆகியோரின்  மேற்பார்வையில் இங்கு தடுப்பூசிகள் போடும் நடவடிக்;கை இடம் பெற்றது.
இதன்போது பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்கானிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் இராணுவத்தினரும் பொலிசாரும், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டனர்.

நேற்றைய தினம் புதிய காத்தான்குடி 167B கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகள் போடப்பட்டன.

60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் கொரேனா தடுப்பூசிகளைப் பெற்று வருகின்றனர்.

இன்றும் மற்றும் நாளையும் தடுப்பூசி போடும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad