ஓட்டமாவடி - மஜ்மா நகரில் சிறுவன் சடலமாக மீட்பு - News View

Breaking

Post Top Ad

Monday, June 7, 2021

ஓட்டமாவடி - மஜ்மா நகரில் சிறுவன் சடலமாக மீட்பு

(எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - மஜ்மா நகரியில் சிறுவன் ஒருவன் இன்று (7) சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

இன்று காலை 6 மணியளவில் திடீரென சோர்வடைந்த நிலையில் இச்சிறுவன் உயிரிழந்துள்ளான்.

பதினான்கு வயதுடைய முகம்மது இஸ்மாயில் முகம்மது பிர்னாஸ் எனும் சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் சிலவேளை பாம்பு தீண்டி உயிரிழந்திருக்கலாமென குடும்பத்தினர் சந்தேகிப்பதாக மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் ஏ.எல்.சமீம் தெரிவித்தார்.

மரணமடைந்த சிறுவனின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad