சீன தயாரிப்பான சைனோபார்ம் தடுப்பூசி கூடுதல் விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.
ஏனைய நாடுகள் இரட்டிப்பு விலைக்கு அதனை கொள்வனவு செய்துள்ளதாகவும் சைனோபாம் தடுப்பூசி கொள்வனவில் எந்த தாமதமும் இடம்பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று நடைபெற்றது. தடுப்பு மருந்து அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்படிருப்பதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் இணை அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மம்பில ஆகியோர் பதிலளித்தனர்.
ரம்புக்வெல்ல தெரிவிக்கையில், சைனோபார்ம் தடுப்பூசி 18 டொலர் முதல் 40 டொலர் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. சைனோபார்ம் தடுப்பூசி உற்பத்தியாளருடன் நடத்திய பேச்சுவார்த்தைபடி விலை முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் முறையில் குறை இருப்பதாக சவால் விடலாம். ஆனால் அதிக விலைக்கு இதனை வாக்கியதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. பல நாடுகள் 25 முதல் 30 டொலருக்கு அதனை வாங்கியுள்ளன.
முன்கூட்டி கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்காததால் அதிக விலை கொடுக்க நேரிட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டும் தவறானது. அந்த வாதத்தை ஏற்க முடியாது என்றார்.
இணை அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மம்பில் பதிலளிக்கையில், இந்த விடயம் தொடர்பில் இலங்கை சீனத் துதரகம் பதில் தெரிவித்துள்ளது. எமக்கு இந்த பிரச்சினைக்கு இலங்கை அரசால் பதில் வழங்க முடியாது.
ஆர்ஜன்டீனா 40 டொலருக்கும் ஹங்கேரியா 38 டொலருக்கும் இதனை வாங்கியுள்ளன. பங்களாதேஷ் 10 டொலருக்கு வாங்கியதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.
கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால் அதிக விலைக்கு வாங்கியதாக தெரிவிப்பதில் உண்மை கிடையாது. குறைந்த விலைக்கே கொள்வனவு செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment