தெற்காசிய நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவிக் கரம் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

தெற்காசிய நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவிக் கரம்

கொவிட்-19 நெருக்கடிக்கு எதிரான போராட்டத்துக்கு உதவ அமெரிக்க அரசாங்கம் தொடர்ந்தும் தெற்காசிய நாடுகளுக்கான தனது ஆதரவினை வழங்கி வருகின்றது.

அதற்கு அமைவாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்காவின் முகவர் நிலையம் எதிர்வரும் நாட்களில் இலங்கை, மாலைதீவு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு முக்கியமான சுகாதாரப் பொருட்களை சிறப்பு விமானங்களுடாக அனுப்பவுள்ளது.

அதைப் போன்று தெற்காசியாவிற்கான இந்த புதிய விமான சேவை அமெரிக்க அரசாங்கத்தால் நேபாளத்திற்கு கொவிட்-19 நிவாரணப் பொருட்களின் மூன்று ஏற்றுமதிகளையும், கொவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஏழு அவசர விமான ஏற்றுமதிகளை இந்தியாவுக்கு வழங்குவதையும் முன்னெடுத்துள்ளது.

இலங்கையில், இந்த உதவியில் 880,000 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் 1,200 துடிப்பு ஆக்சிமீட்டர்கள் ஆகியவை முன்னணி சுகாதார ஊழியர்களுக்கும் தற்போதைய வெடிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மற்றவர்களுக்கும் பெரிதும் உதவியாக அமையும்.

கொவிட்-19 தொற்று நோய்க்கு ஆரம்பத்தில் இருந்தே பதிலளிக்க அமெரிக்காவும் இலங்கையும் நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ளன.

மேலும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்காவின் முகவர் நிலையத்தின் உதவி நாடு முழுவதும் உள்ள 25 மாவட்டங்கள் மற்றும் ஒன்பது மாகாணங்களில் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு பயனளித்துள்ளது.

No comments:

Post a Comment