டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுவது 100 சதவீதம் உறுதி - News View

About Us

About Us

Breaking

Thursday, June 3, 2021

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுவது 100 சதவீதம் உறுதி

ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி முன்னோக்கி செல்லும் என்ற 2020 டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பாளர் சீகோ ஹாஷிமோடோ 100 சதவீதம் உறுதியாக கூறியுள்ளார்.

எனினும் கொவிட்-19 நிலைமகள் மேலும் மோசமானால் பார்வையாளர்கள் இல்லாமல் மூடிய அரங்கில் போட்டிகளை நடத்த தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கள் ஜப்பானில் அதிகரித்து வருவதுடன், நாட்டின் பெரும்பாலான பகுதிகள் அவசரகால நிலையில் உள்ளது.

அதேநேரம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஜூலை மாதம் 23 ஆம் திகதி நடாத்த  திட்டமிடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் ஒரு வருடம் தாமதமான பின்னர் விளையாட்டுக்கள் இரத்து செய்யப்பட வேண்டும் அல்லது மீண்டும் தள்ளி வைக்கப்பட வேண்டும் என்று ஜப்பானில் பொது கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து வெளிக்காட்டுகின்றன. இந்நிலையிலேயே மேற்கண்ட கருத்தினை ஹாஷிமோடோ தெரிவித்துள்ளார்.   

No comments:

Post a Comment