அதிக விலைக்கு பொருட்களை விற்போருக்கு எச்சரிக்கை, சுற்றிவளைப்புகளை ஆரம்பித்த நுகர்வோர் அதிகார சபை - News View

About Us

About Us

Breaking

Sunday, June 13, 2021

அதிக விலைக்கு பொருட்களை விற்போருக்கு எச்சரிக்கை, சுற்றிவளைப்புகளை ஆரம்பித்த நுகர்வோர் அதிகார சபை

பயணத்தடை அமுலிலுள்ள காலப்பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற நடமாடும் வர்த்தக நிலையங்களில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா? என்பது தொடர்பில் ஆராய சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நுகர்வோர் அதிகார சபையினால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படுவதாக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க தெரிவித்தார். 

அவ்வாறு அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களின் அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்

No comments:

Post a Comment