இரண்டாவது தடுப்பூசி வழங்க போதுமான அளவு கையிருப்பில், மக்கள் அச்சப்படத் தேவையில்லை - News View

About Us

About Us

Breaking

Sunday, June 13, 2021

இரண்டாவது தடுப்பூசி வழங்க போதுமான அளவு கையிருப்பில், மக்கள் அச்சப்படத் தேவையில்லை

இரண்டாவது தடுப்பூசிக்கான மருந்து (டோஸ்) தற்சமயம் கிடைத்திருப்பதினால் பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லையென்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார். 

சுகாதார அமைச்சில் (12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இது தொடர்பாக தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது 15 இலட்சத்து 50 ஆயிரம் சினோபாம் தடுப்பூசி டோஸ்கள் கிடைத்துள்ளன. தற்போது முதலாவது தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

ஸ்புட்னிக் இரண்டாவது தடுப்பூசிகளும் தற்சமயம் கிடைத்துள்ளன. இந்த விடயம் பற்றி அநாவசியமாக அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாமென்றும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment