இலங்கையில் இதுவரை 22 இலட்சத்து 85 ஆயிரத்து 572 பேருக்கு தடுப்பூசிகள் வெற்றிகரமாக முன்னெடுப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, June 13, 2021

இலங்கையில் இதுவரை 22 இலட்சத்து 85 ஆயிரத்து 572 பேருக்கு தடுப்பூசிகள் வெற்றிகரமாக முன்னெடுப்பு

நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதர அமைச்சின், தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று (14) இரவு வரை 22 இலட்சத்து 85 ஆயிரத்து 572 பேருக்கு கொவிட்19 முதலாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதோடு, இதில் 5 இலட்சத்து 44 ஆயிரத்து 898 பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 இலட்சத்து இருபத்தையாயிரத்து 242 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது இதன் இரண்டாவது தடுப்பூசி 3 இலட்சத்து 55 ஆயிரத்து 412 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 12 இலட்சத்து 95 ஆயிரத்து 344 பேருக்கும், இரண்டாவது டோஸ் ஒரு இலட்சத்து 87 ஆயிரத்து 372 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதலாவது டோஸ் 64 ஆயிரத்து 986 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாவது டோஸ் 2,114 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீன நாட்டவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 2,865 பேருக்கும் அதன் இரண்டாவது டோஸ் 2,435 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment