கொவிட் தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் தோல்வி : அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கண்டித்த வட கொரிய ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 30, 2021

கொவிட் தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் தோல்வி : அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கண்டித்த வட கொரிய ஜனாதிபதி

வட கொரிய ஜனாதிபதி கிம் யொங் உன், கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான பணிகளில் தோல்வியுற்றதற்காக உயர் ஆளும் கட்சி அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கண்டித்துள்ளார்.

முன்னர் தனது நாட்டில் கொவிட்-19 தொற்றுக்கள் இல்லை என்று மறுத்த வட கொரியாவில் தொற்று நோயின் தீவிரத்தன்மை இதன் மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

கொவிட்-19 நிலைமகள் வட கொரியாவில் பெரும் நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதுடன், நாட்டின் மற்றும் மக்களின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என்று அரச ஊடகங்கள் புதன்கிழமை செய்தி வெளியிட்டன.

எனினும் வட கொரிய அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. அறிக்கையின்படி என்ன நடந்தது, அல்லது கொவிட்-19 தொற்று மக்களை எவ்வாறு ஆபத்தில் ஆழ்த்தியது என்பதை தெளிவாக விவரிக்கவில்லை.

இதுவரை எந்த கொவிட்-19 தொற்றுக்களையும் வட கொரியா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால் தனிமைப்படுத்தப்பட்ட விதிகள், எல்லை மூடல் மற்றும் உள்நாட்டு பயணக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட கடுமையான வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை வட கொரியா விதித்துள்ளது.

இதனால் சர்வதேச பொருளாதாரத் தடைகளுடன் சேர்ந்து, உணவுப் பற்றாக்குறை மற்றும் மோசமான பொருளாதாரத்திற்கு வட கொரியா தள்ளப்பட்டது.

தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முக்கியமான நீண்டகால நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தவறியது உட்பட, சில கட்சி நிர்வாகிகள் கடமையை புறக்கணிப்பதை நிவர்த்தி செய்வதற்காக கிம் கொரியாவின் தொழிலாளர் கட்சியின் பொலிட்பீரோவின் கூட்டத்தை அழைத்தார்.

தொற்று நோயை கட்டுப்படுத்துவதில் தோல்வியுற்றதற்காக கூட்டத்தில் பல பொலிட்பீரோ உறுப்பினர்கள், மத்திய குழுவின் செயலாளர்கள் மற்றும் பல மாநில நிறுவனங்களின் அதிகாரிகள் மாற்றப்பட்டதுடன், பல அதிகாரிகளும் கண்டிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment