அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சாய்ந்தமருதுக்கு விஜயம்! - News View

Breaking

Post Top Ad

Wednesday, June 9, 2021

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சாய்ந்தமருதுக்கு விஜயம்!

மாளிகைக்காடு நிருபர்

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் சாய்ந்தமருது கிளையின் தலைவரும் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான அ.கபூர் அன்வரின் அழைப்பின் பேரில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் சஹிட் எம். றிஸ்மி சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. அலுவலகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டு இருந்தார்.

இவ் விஜயத்தின் போது அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு திட்டத் தவிசாளர் எஸ்.தஸ்தக்கீர் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளர் கே.எல்.சுபைர் , சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ.பேரவையின் செயலாளர் ஆசிரியர் எஸ். அஷ்ரப்கான் அமைப்பாளர் எம்.எஸ்.எம். இம்தியாஸ் விளைளையாட்டுப் பிரிவு தவிசாளர் சிப்னாஸ் அஸிஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ் விஜயத்தில் பிரதேசத்தின் அபிவிருத்தி இளைஞர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையை முன்னேற்ற செய்யவேண்டிய விடயங்களை பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் இது தொடர்பிலான கோரிக்கை மனுவும் சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. தலைவரினால் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசிய தலைவரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் சாய்ந்தமருது கிளையில் அங்கத்துவம் பெறுவதற்கான உத்தியோக பூர்வ விண்ணப்ப படிவமும் தேசிய தலைவரினால் வழங்கிவைக்கப்பட்டதுடன் எதிர் காலத்தில் சாய்ந்தமருது கிளைக்கு முதற் கட்டமா 100 அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளுவதற்கு முடிவும் எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad