கைவசமுள்ள தொகையை 7 நாட்களுக்குள் அறிவிக்கவும்; பதிவு செய்யவும் : பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் 3 வர்த்தமானிகள் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 12, 2021

கைவசமுள்ள தொகையை 7 நாட்களுக்குள் அறிவிக்கவும்; பதிவு செய்யவும் : பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் 3 வர்த்தமானிகள்

அரிசி, நெல், சீனி, சோளம், பால்மா இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள், விநியோகத்தர்கள், சேகரிப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் தங்களின் கையிருப்பு தகவல்களை வழங்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மூன்று வெவ்வேறு அதி விசேட வர்த்தமானிகளை வெளியிட்டுள்ள பாவனையாளர்கள் அதிகார சபை இவ்வறிவித்தலை விடுத்துள்ளது.

ஏற்கனவே தமது அதிகார சபையின் கீழ் பதிவு செய்துள்ள மேற்குறிப்பிட்ட நபர்கள் அல்லது நிறுவனங்கள் இவ்வறிவித்தலை விடுத்து 7 நாட்களுக்குள் குறித்த தகவல்களை வழங்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த உற்பத்திகள் தொடர்பான மேற்குறிப்பிட்ட விடயங்களில் ஈடுபடும் மேற் குறிப்பிட்ட தரப்பினர் ஏற்கனவே பதிவு செய்யாத நிலையில், இவ்வறிவித்தல் விடுத்து 7 நாட்களுக்குள் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையில் பதிவு செய்யுமாறும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment