யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள் இன்றுடன் நிறைவடைந்ததாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.
அடுத்த கட்ட தடுப்பூசிகள் வார இறுதியில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் எனவே ஏற்கெனவே தடுப்பூசி வழங்க தயாராக இருந்த கிராம சேவகர் பிரிவுகளில் நாளை வியாழக்கிழமை தடுப்பூசி வழங்கப்பட மாட்டாது எனவும் அந்த பகுதி மக்களுக்கான தடுப்பூசிகள் இரண்டாம் கட்ட தடுப்பூசி வந்தவுடன் குறித்த நிகழ்ச்சி நிரலின்படி தடுப்பூசி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
எனவே பொதுமக்கள் இது தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை அடுத்த கட்ட ஊசி கிடைத்தவுடன் அந்த நிகழ்ச்சி நிரலின்படி தொடர்ச்சியாக தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படும்.
ஏற்கனவே யாழ் மாவட்டத்திற்கு 50 ஆயிரம் தடுப்பூசிகள் அரசினால் வழங்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து இன்று வரை அந்த தடுப்பூசிகள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு, இன்றுடன் தடுப்பூசி நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்ட தடுப்பூசி கிடைத்தவுடன் ஏனைய மக்களுக்கும் வழங்கப்படும்.
குறிப்பாக நேற்று செவ்வாய்க்கிழமை மாலையுடன் 32 ஆயிரம் தடுப்பூசிகள் நிறைவடைந்த நிலையில், இன்றையதினம் மிகுதி தடுப்பூசியும் நிறைவடைந்துள்ளது.
எனினும் இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பணியாளர்கள் மற்றும் 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என எதிர்பார்த்து இருந்த போதிலும் கூடுதலான மக்கள் ஆர்வம் காட்டி தடுப்பூசியை பெற்றதன் காரணமாக இன்று மதியத்துடன் தடுப்பூசி நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment